கோவில்பட்டி கடையில் தீவிபத்து


கோவில்பட்டி கடையில் தீவிபத்து
x
தினத்தந்தி 23 July 2021 8:30 PM IST (Updated: 23 July 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி கடையில் தீவிபத்து ஏற்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி புது ரோடு முத்தையா மால் தெருவில் டி.வி. பழுது நீக்கும் கடை நடத்தி வருபவர் நாராயணன் (வயது 52). இவர் நேற்று மாலையில் கடையை பூட்டிவிட்டு சாப்பிட சென்றார். சிறிது நேரத்தில் கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில்  தீயணைப்பு வீரர்கள் அதிகாரி அருள்ராஜ் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story