வேலங்குடியில் குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற நடவடிக்கை ஊராட்சி தலைவர் தகவல்


வேலங்குடியில் குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி நடைபெற நடவடிக்கை ஊராட்சி தலைவர் தகவல்
x
தினத்தந்தி 23 July 2021 8:35 PM IST (Updated: 23 July 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் தங்குதடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விளமல், 

திருவாரூர் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வெங்கடேஷ், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்ட பணிகள் குறித்து கூறுகையில், ‘வேலங்குடி ஊராட்சியில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களில் 3 நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் தங்குதடையின்றி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வெள்ளக் குடியில் இருந்து வேலங்குடி வரை ரூ.4 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வேலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. ஊராட்சியில் 95 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. 250 பேருக்கு முதல் தவணையாக கோவிஷீல்டு செலுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story