விளக்குடியில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விளக்குடியில் பெண்கள்-குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Published on

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் விளக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி செல்வம் தலைமை தாங்கினார். போலீஸ் ஏட்டு மீனாட்சி வரவேற்றார். ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் ஸ்மித்தா, பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன், சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய முதன்மை பொறுப்பாளர் மெர்லின் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் பாரதமாதா சேவை நிறுவனங்களின் சார்பில் 10 பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் வடிவேல், இன்னர் வீல் சங்க தலைவி வினோதா, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாஸ்கர், பெற்றோர்- ஆசிரியர் கழக துணைத்தலைவர் உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com