‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஆவூரில் பள்ளி மைதானத்துக்கு வேலி அமைப்பு போலீசார் நடவடிக்கை


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: ஆவூரில் பள்ளி மைதானத்துக்கு வேலி அமைப்பு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 July 2021 8:48 PM IST (Updated: 23 July 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஆவூரில் பள்ளி மைதானத்துக்கு வேலி அமைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் விளையாட்டு மைதானம், கடைத்தெரு பகுதியில் அமைந்துள்ளது. மைதானம் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியாக இருந்தது. இதை சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வந்தனர்.

மைதானத்தை சுற்றி சுவர் அமைத்து, அங்கு மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மைதானத்தில் மாணவர்களுக்கு ேதவையான உடற்கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது.

இதன் எதிரொலியாக வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்௧ள் வினோத், அன்பழகன் மற்றும் போலீசார் உடனடியாக அங்கு சென்று மைதானத்தை பார்வையிட்டு ஆவூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்துடன் இணைந்து சம்பந்தப்பட்ட மைதானத்தை சுற்றி கம்பி வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கம்பி வேலி அமைக்கப்பட்டது.

வெளி ஆட்கள் மைதானத்துக்குள் செல்ல முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டு, அங்கு எச்சரிக்கை பலகையையும் போலீசார் வைத்து உள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story