சுற்றுலா மையங்களை திறக்க வேண்டும்
சுற்றுலா மையங்களை திறக்க வேண்டும்
வால்பாறை
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியிலிருந்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் கொரோனா தொற்றின் பயமில்லாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் எங்கும் செல்லமுடிவதில்லை. ஆறுகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு வருவதால் எங்கும் குளித்து மகிழ முடிவதில்லை.
]
இந்த நிலையில் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதியின் இயற்கை அழகை ரசித்து விட்டு சென்று வருகின்றனர். எனவே வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆழியார் அருகில் உள்ள குரங்குஅருவிக்கு செல்வதற்கும் 9- வது கொண்டைஊசி வளைவு பகுதியில் உள்ள ஆழியார் அணை காட்சி முனை பகுதிக்கு செல்வதற்காவது வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
9-வது கொண்டைஊசி வளைவு காட்சிமுனை மாடமானது அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அத்துமீறி பாறையின் மீது ஏறி சென்று வருகின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் குரங்குஅருவி, 9-வது கொண்டைஊசி வளைவு காட்சிமுனை பகுதிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story