3 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது
3 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 2 பேர் கைது
கோவை
கோவை-பாலக்காடு ரோடு குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மாவட்ட உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜான்சுந்தர் மேற்பார்வையில்
பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட சரக்கு லாரி ஒன்று வந்தது.
அதை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றது. உடனே போலீசார் அந்த லாரியை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்தனர்.
தொடர்ந்து அதில் இருந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அருகே நல்லூரை சேர்ந்த ஆண்டனி என்ற அந்தோணி (வயது 34), கோவை கண்ணப்பநகரை சேர்ந்த அருண் (26) என்பதும்,
இவர்கள் கோவையில் இருந்து கேரளாவுக்கு சரக்கு லாரியில் 3½ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 3½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story