புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 23 July 2021 9:27 PM IST (Updated: 23 July 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர்.

புதுச்சேரி, ஜூலை.24-
புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 98 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று பரிசோதனை
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 6,255 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 98 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 152 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 766 பேர் என மொத்தம் 918 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 132 பேர் குணமடைந்துள்ளனர்.
3 பேர் பலி
நேற்று முன்தினம் 3 பேர் பலியாகி உள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குயவர்பாளையத்தை சேர்ந்த 55 வயது ஆண், வெண்ணிலா நகரை சேர்ந்த 64 வயது மூதாட்டி, மாகியில் 84 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,786 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் உயிரிழப்பு 1.49 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 7 பேரும், முன்கள பணியாளர் ஒருவரும், பொதுமக்கள் 3 ஆயிரத்து 257 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 6 லட்சத்து 59 ஆயிரத்து 466 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு தொற்று
இந்தநிலையில் 3 சிறுவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் 5 வயதுக்கு மேற்பட்டவர். மற்றொருவர் 5 வயதுக்கு உட்பட்டவர் ஆவர்.
--______


Next Story