11 பேருக்கு கொரோனா பாதிப்பு

x
தினத்தந்தி 23 July 2021 10:01 PM IST (Updated: 23 July 2021 10:01 PM IST)
11 பேருக்கு கொரோனா பாதிப்பு
பொள்ளாச்சி
கொரோனா 2-வது அலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இதுவரைக்கும் 11 ஆயிரத்து 449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 11 ஆயிரத்து 161 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரைக்கும் 107 பேர் உயிரிந்து உள்ளனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நேற்று ஒருவருக்கும், ஆனைமலை ஒன்றியம், பொள்ளாச்சி ஒன்றியத்தில் தலா 3 பேருக்கும், தெற்கு ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் தலா 2 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





