ஆடி முதல் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி முதல் வெள்ளி
ஆடி மாதம் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கிருஷ்ணகிரி மாவட்ட மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் 8-வது கிராசில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அபிேஷகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. அக்ரஹாரத்தில் உள்ள அம்பா பவானி கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது.
ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது.
கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முக கவசம் அணிந்தபடி நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம்செய்தனர்.
Related Tags :
Next Story