தளி அருகே பூக்கள் பறிக்க சென்ற போது மினிவேன் கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் படுகாயம்


தளி அருகே பூக்கள் பறிக்க சென்ற போது மினிவேன் கவிழ்ந்து 10 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 23 July 2021 4:44 PM GMT (Updated: 23 July 2021 4:44 PM GMT)

தளி அருகே பூக்கள் பறிக்க தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே பூக்கள் பறிக்க தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மினிவேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
மினி வேன் கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள மிலிதிக்கி மற்றும் மாடக்கல் கிராமங்களை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நேற்று ஒரு மினிவேனில் அகலகோட்டை கிராமத்திற்கு பூக்கள் பறிப்பதற்காக சென்றனர். இந்த வேனை டிரைவர் முருகேஷ் என்பவர் ஓட்டி சென்றார். திம்மனட்டி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சின்னம்மாள் (வயது 70), கலைவாணி(18), ருக்குமணி (22), ராணி (40), துளசி (35) உள்பட 10 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லேசான காயம் அடைந்தனர். 
தீவிர சிகிச்சை
இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள், படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு அஞ்செட்டி மற்றும் தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story