சிறுமியை மிரட்டி பலாத்காரம் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை மிரட்டி பலாத்காரம் 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 23 July 2021 4:44 PM GMT (Updated: 2021-07-23T22:14:19+05:30)

சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பாக 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் அரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

அரூர்:
சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தொடர்பாக 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் அரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
பலாத்காரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் அரூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அஜித்குமார் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதிக்கு சென்ற பெத்தூர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த விஜய் (26), தியாகு (36) ஆகியோர் அஜித்குமாரை மிரட்டி அங்கிருந்து துரத்தி உள்ளனர். பின்னர் விஜய் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தியாகு செல்போனில் அதை படம் பிடித்து உள்ளார்.
2 பேர் கைது
இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று அந்த சிறுமியை 2 பேரும் மிரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது சிறுமியை அவருடைய தாய் காப்பாற்றி விசாரித்துள்ளார். அவரிடம் சிறுமி நடந்த சம்பவங்களை கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விஜய், தியாகு ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக அஜித்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story