ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் ஊராட்சி அருப்புக்கோட்டைநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஓடையில் 100 நாள் வேலை திட்ட பணி நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றும் மாற்றுத்திறனாளியான பாலு (வயது60) என்பவர் வேலைக்கு தாமதமாக வந்தார். இதனால் அவரை வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபோஸ்(கிராம ஊராட்சி) பேச்சுவார்த்தை நடத்தி விசாரணையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story