குடும்பத்துடன் பட்டதாரி பெண் தர்ணா


குடும்பத்துடன் பட்டதாரி பெண் தர்ணா
x
தினத்தந்தி 23 July 2021 10:36 PM IST (Updated: 23 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு ேவலை கேட்டு குடும்பத்துடன் பட்டதாரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜதானிக்கோட்டையை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பானுப்பிரியா (வயது 33). எம்.எஸ்சி. பட்டதாரி. 

இவர்களுக்கு நிகில்தேவ் (10), சதீபன் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். பானுப்பிரியா அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பானுப்பிரியாவை வேலையை விட்டு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி நிறுத்தினார். இதனால் பானுப்பிரியா, தனது கணவர் மகேந்திரன் மற்றும் மகன்களுடன் நேற்று பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தனக்கு வேலை கேட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பானுப்பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

 இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் அவர் மனு கொடுத்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story