திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து


திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 23 July 2021 5:17 PM GMT (Updated: 2021-07-23T22:47:54+05:30)

திருவெண்ணெய்நல்லூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து விபத்துக்குள்ளானது.

அரசூர், 

திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னையை நோக்கி மினிலாரி ஒன்று முருங்கைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. மினிலாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் மகன் ரமேஷ்(வயது 35)  என்பவர் ஓட்டி வந்தார். 

நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூரில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில் காயமடைந்த ரமேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது           குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story