அரக்கோணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்


அரக்கோணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 10:53 PM IST (Updated: 23 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்ட போராட்டம் கடந்த 14-ந் தேதி ராணிபேட்டை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட போராட்டம் நேற்று மாலை மாவட்ட செயலாளர் அமர்நாத் தலைமையில் அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உதவி கலெக்டர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து தீர்வு காண தமிழக அரசையும், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரையும் வலியுறுத்தி பேசினர். 

மேலும் மூன்றாம் கட்ட போராட்டமாக வருகிற 31-ந் தேதி ராணிபேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

Next Story