மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருவோணத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு: திருவோணத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2021 11:00 PM IST (Updated: 23 July 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருவோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரத்தநாடு,

கர்நாடகா அணை மூலம் தமிழகத்திற்கு நடப்பாண்டில் வழங்க வேண்டிய தண்ணீரை விடுவிக்கவேண்டும். கர்நாடகா மேகதாதுவில் தடுப்பணை கட்டக்கூடாது. கல்லணை கால்வாய் ஆற்றில் பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் திருவோணம் வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு முன்பு மத்திய -மாநில அரசுகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் சின்னத்துரை தலைமை தாங்கினார்.

இதில் சங்கத்தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

Next Story