வெவ்வேறு சம்பவங்களில் தூய்மை பணியாளர் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் தூய்மை பணியாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
போடி:
போடி முனிசிபல் காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 34). இவர் போடி நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் மனமுடைந்த அன்பழகன் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள சிந்துவம்பட்டியை சேர்ந்தவர் பிரவின் குமார் (23). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல கம்பம் 11-வது வார்டு கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் சசிக்குமார் (42) கட்டிட தொழிலாளி. இவருக்கு கல்பனா என்ற மனைவியும், அனிஸ்குமார், அபினேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சசிக்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து கல்பனா கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் கூடலூரில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் சசிக்குமார் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story