இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூர்
அகில இந்திய பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் காட்பாடி சாலையில் உள்ள கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் எம்.சிட்டிபாபு தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி. மற்றும் வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியதைப் போன்று பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை பெறுவதற்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் பத்மநாபன், எல்.ஐ.சி. தொழிற்சங்க கோட்ட தலைவர் ராமன் மற்றும் நிர்வாகிகள் குபேந்திரன், ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story