பஸ் நிறுத்தத்தில் கிடந்த பெண் குழந்தை மீட்பு
கறம்பக்குடி அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தை மீட்கப்பட்டது.
கறம்பக்குடி, ஜூலை.24-
கறம்பக்குடி அருகே பஸ் நிறுத்தத்தில் கிடந்த பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தை மீட்கப்பட்டது.
பெண் குழந்தை
கறம்பக்குடி அருகே பிலாவிடுதி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை கேட்ட அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அருகில் யாரும் இல்லை.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இதுகுறித்து கறம்பக்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற தாசில்தார் விஸ்வநாதன் இளைஞர்கள் உதவியுடன் குழந்தையை மீட்டுகறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று டாக்டர்களிடம் ஒப்படைத்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலர்கள் குழந்தையை பெற்று சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து பிலாவிடுதி கிராம நிர்வாக அதிகாரி தீபிகா கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து குழந்தையை போட்டு சென்றது யார்? பெண் குழந்தை என்பதால் போட்டு சென்றார்களா? பெற்றோர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story