போலீஸ்காரர் மீது தாக்குதல்


போலீஸ்காரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 23 July 2021 7:10 PM GMT (Updated: 2021-07-24T00:40:06+05:30)

மானாமதுரையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரை ெரயில்வே காலனி சவேரியார் பட்டணத்தை சேர்ந்தவர் சுதந்திரராஜ்குமார் (வயது 33). போலீஸ்காரர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சந்தோஷிடம் தங்க மோதிரத்தை கொடுத்து வைத்து இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தங்க மோதிரத்தை திருப்பி கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் மனஸ்தாபம் இருந்து வந்தது. இந்த நிலையில் சுதந்திரராஜ்குமார் மானாமதுரை ரெயில்நிலையம் அருகே காரில் நின்றிருந்த போது அங்கு வந்த சந்தோஷ்(24), அவருடைய நண்பர்கள் காளிஸ்வரன்(30), மனோஜ்(32) ஆகியோர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளனர். காரையும் சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மானாமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Next Story