பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது


பெண் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 12:55 AM IST (Updated: 24 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

மூலைக்கரைப்பட்டியில் பெண் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் கடந்த 17-ந் தேதி ராஜலட்சுமி (வயது 50) என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அப்போது வீட்டில் இருந்த அன்பழகன் (30) என்பவரும் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியின் கணவர் வேலாயுதம் (60), அவரது மருமகன் கல்லத்தியை சேர்ந்த அபிமன்யு (33) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கல்லத்தியை சேர்ந்த அபிமன்யுவின் உறவினர் மோகன்ராஜ் (40) என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று நாங்குநேரி பஸ்நிலையம் அருகே மோகன்ராஜை போலீசார் கைது செய்தனர்.

Next Story