156 பேருக்கு கொரோனா தடுப்பூசி


156 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 24 July 2021 12:59 AM IST (Updated: 24 July 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் டாக்டர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா ஆகியோர் அடங்கிய சுகாதார குழுவினர் 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். 
1 More update

Next Story