கல் கிடங்கு நீரில் மூழ்கி சிறுவன் பலி
சிவகாசி அருகே கல் கிடங்கு நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிவகாசி,
சிவகாசி அருகே கல் கிடங்கு நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இறுதி சடங்கு
வெம்பக்கோட்டை அருகே உள்ள கே. மடத்துப்பட்டி ராஜீவ்காலனியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது36). இவர் சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் நடந்த உறவினர் இறுதி சடங்கில் கலந்துவிட்டு பின்னர் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சிவகாசியை அடுத்த மணியம்பட்டி கல் கிடங்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கல் கிடங்கில் குடும்பத்தினருடன் குளித்துள்ளார்.
சிறுவன் பலி
அப்போது செல்வகுமார் மகன் ஞானகுருசாமி (9) எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினான். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் உதவியுடன் மகனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் செல்வக்குமார் சேர்த்தார்.
அவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறுவன் கல் கிடங்கு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story