மாவட்டத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 113 பேருக்கு பாதிப்பு இருந்தது. நேற்று மாவட்டத்தில் 110 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டது.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 22 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர். எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், வீரபாண்டியில் 4 பேர், சேலம் ஒன்றிய பகுதி, மேச்சேரியில் தலா 5 பேர், ஓமலூரில் 6 பேர், நங்கவல்லி, தாரமங்கலத்தில் தலா 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வீடு திரும்பி உள்ளனர்
அதே போன்று தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணத்தில் தலா ஒருவர், ஆத்தூரில் 2 பேர், வாழப்பாடி 3 பேர், கெங்வல்லியில் 4 பேர் பாதிப்படைந்து உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 8 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது உறுதி படுத்தப்பட்டது.
இது வரை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 628 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 89 ஆயிரத்து 499 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,595 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 1,534 பேர் தொற்று பாதிப்பால் இறந்து உள்ளனர்.
Related Tags :
Next Story