கன்னியாகுமரியில் கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் நேற்றுமுன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதே சமயத்தில் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் இருந்து அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து வந்து பாறையில் மோதி சிதறின.
நேற்று காலை வாவத்துறையில் இருந்து கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் பாதியிலேயே அவர்கள் கரைக்கு திரும்பினர். மேடான பகுதிகளில் கட்டுமரம் மற்றும் வள்ளத்தை நிறுத்தி வைத்தனர். சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் வழக்கம் போல் புறப்பட்டு சென்றன.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக கன்னியாகுமரிக்கு வந்தனர்.
ஆனால் மேகமூட்டமாக இருந்ததால், அவர்களால் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story