வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்


வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்
x
தினத்தந்தி 24 July 2021 2:45 AM IST (Updated: 24 July 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்குடியில் இறைச்சிக்கடைகள் வெறிச்சோடின.

காரைக்குடி,

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. அந்த மாதம் முழுவதும் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். அதுவும் ஆடி வெள்ளிக்கிழமை விசேஷமானது. இந்த நிலையில் நேற்று ஆடி முதல் வெள்ளி என்பதால் எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்காததால் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை.
 காரைக்குடி கழனிவாசல் பகுதியில் இயங்கி வரும் மீன் அங்காடி மார்க்கெட் பகுதியில் 2 மீன்கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. பெரும்பாலானோர் எதிர்பார்த்த வியாபாரம் இருக்காது என்பதால் கடைகளை திறக்கவில்லை. அதே போல் இறைச்சி கடைகளும் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story