பெண் ஊழியரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
கோவையில் பெண் ஊழியரை மிரட்டிய ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை
கோவை ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 22). இவர் கோவை மாநகராட்சி 40-வது வார்டு பகுதியில் கொரோனா நோய் பரவல் தொடர்பாக தற்காலிக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது ஆவாரம்பாளையம் தெற்கு வீதியில் உள்ள சுரேஷ் என்ற ஆட்டோ டிரைவர் வீட்டில் கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சவுமியாவிடம் சுரேஷ் தகராறு செய்து சாதி பெயரை கூறி மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story