குடிக்க பணம் தரமறுத்த தொழிலாளி குத்திக்கொலை


குடிக்க பணம் தரமறுத்த தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 2 Aug 2021 3:17 PM IST (Updated: 2 Aug 2021 3:17 PM IST)
t-max-icont-min-icon

குடிக்க பணம் தரமறுத்த தொழிலாளி குத்திக்கொலை.

திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் பீட்டர் (வயது 45). நைலான் கயிறு தயாரிக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோவில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடும்பத்தை பிரிந்து சுற்றிக்கொண்டிருந்த வின்சென்ட் (48) என்பவர் குடிக்க பணம் தரும்படி கேட்டார். அதற்கு பீட்டர், பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட், அருகில் கிடந்த உடைந்த டியூப் லைட்டை எடுத்து பீட்டரின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பீட்டர், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு, சம்பவம் தொடர்பாக வின்சென்டை கைது செய்தனர். அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

Next Story