பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி


பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Aug 2021 12:06 PM GMT (Updated: 2 Aug 2021 12:06 PM GMT)

பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சிறுவள்ளிக்குப்பத்தில் புறம்போக்கு இடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வரும் 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை அந்த இடத்தில் இருந்து காலி செய்யும்படி அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பட்டா கேட்டு மனு கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதன்பின்பு, கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

பின்னர், இதுதொடர்பாக விழுப்புரம் கலெக்டர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story