5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்


5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்
x
தினத்தந்தி 2 Aug 2021 5:44 PM IST (Updated: 2 Aug 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.

சென்னை,

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தின் 5 நாட்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

* கும்மிடிப்பூண்டி-செங்கல்பட்டு இடையே காலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை, தாம்பரம் வழியாக காலை 9.45 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

* செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் தாம்பரம், கடற்கரை வழியாக மதியம் 1.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

* கும்மிடிப்பூண்டி-தாம்பரம் இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை வழியாக மாலை 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

* தாம்பரம்-கும்மிடிப்பூண்டி இடையே மாலை 5.58 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை வழியாக இரவு 8.50 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story