வடமாநில தொழிலாளி சாவு

மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி சாவு
வடமாநில தொழிலாளி சாவு
Published on

மதுரை

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் சகானி(வயது 28). இவர் சிந்தாமணி ரோட்டில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த ஆலையின் மாடியில் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்த அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்ணாடி கூரையின் மீது தவறிவிழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com