மன்னார்குடியில், பரிதாபம்:தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை சாவு

மன்னார்குடியில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
மன்னார்குடி:-
மன்னார்குடியில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
2 வயது ஆண் குழந்தை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மீனாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி லதா. இவர்களுடைய 2 வயது ஆண் குழந்தை யோகேஸ்வரன். நேற்று மதியம் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவனை காணவில்லை.
இதையடுத்து பெற்றோர் குழந்தையை தேடி உள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் யோகேஸ்வரன் மூழ்கியபடி கிடந்தான். அவன் விளையாடி கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதை பார்த்து கதறிய பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை உயிரிழந்தது மன்னார்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story