ஏ.சி. எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு


ஏ.சி. எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு
x
தினத்தந்தி 2 Aug 2021 10:23 PM IST (Updated: 2 Aug 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை வணிக வளாகங்களில் ஏ.சி.எந்திரத்தில் காப்பர் வயர் திருட்டு நடைபெற்று உள்ளது.

தேவகோட்டை,

தேவகோட்டை சரஸ்வதி வாசக சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏ.சி. எந்திரங்களின் பின்னால் உள்ள காப்பர் வயரை யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இதே போல அதன் எதிரே கண்டதேவி சொர்ணலிங்கம் என்பவரது பழைய இரும்பு கடையில் இருந்தும் காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். அதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story