மலைரெயிலை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்
மலைரெயிலை பொலிவுபடுத்தும் பணி மும்முரம்.
ஊட்டி,
குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிறார். 3 நாள் சுற்றுப்பயணமாக வருவதால் மலைப்பிரதேசத்தில் புகழ்பெற்ற ஊட்டி மலைரெயிலில் பயணிக்க வாய்ப்பு உள்ளது.
இதனால் ரெயில்வே அதிகாரிகள் மலைரெயிலை தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் நேற்று குன்னூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 2 மலைரெயில் என்ஜின் வர்ணம் தீட்டி பொலிவுபடுத்தும் பணி நடைபெற்றது. மேலும் ரெயில் பெட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் கூறும்போது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலைரெயிலில் பயணம் செய்யக்கூடும் என்பதால் முன்னேற்பாடாக தயார் நிலையில் வைத்து உள்ளோம் என்றனர். கொரோனா பாதிப்பால் மலைரெயில் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி வருகைக்காக தயாராகுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story