புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்பு
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘இ-ரூபி' பணபரிவர்த்தனை நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாடுதுறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை:
பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘இ-ரூபி' பணபரிவர்த்தனை நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மயிலாடுதுறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.
புதுச்சேரி கவர்னர்
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ‘இ-ரூபி' என்ற பணபரிவர்த்தனை முறை வசதியை நேற்று தொடங்கி வைத்து பேசினார். இதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில கவர்னர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மயிலாடுதுறைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார். இதனால் அவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அமர்ந்திருந்த பின்பகுதியில் ‘ராஜ் நிவாஸ் புதுச்சேரி' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சி மாலை 4.35 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடந்தது.
பூங்கொத்து கொடுத்து வரவேற்பு
முன்னதாக மயிலாடுதுறைக்கு வந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
கல்லூரி நிர்வாகம் சார்பில் புதுச்சேரி கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story