5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை


5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 2 Aug 2021 10:48 PM IST (Updated: 2 Aug 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை,

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகப்பன் (வயது57). இவர் 5 வயது சிறுமியை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முருகப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
சாகும் வரை ஆயுள்தண்டனை
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முருகப்பனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.70 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முருகப்பனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தது இது 2-வது தீர்ப்பு என கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story