மேலும் 90 பேருக்கு கொரோனா


மேலும் 90 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Aug 2021 10:48 PM IST (Updated: 2 Aug 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

மேலும் 90 பேருக்கு கொரோனா

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாகினர். 
90 பேருக்கு கொரோனா 
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 1,957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
5 பேர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 985ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 211ஆக உள்ளது. 
மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 933 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 841ஆக உள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. 
1 More update

Next Story