தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தாசு தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் கத்தார் பாலு, செல்வநாயகபுரம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பேரறிவாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தூத்துக்குடி செல்வநாயகபுரம் டி.எம்.சி. காலனியில் குடியிருந்து வரும் 300 குடும்பங்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தையும் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, தற்போது குடியிருக்கும் இடத்திலேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story