நூற்பாலையில் தீ விபத்து


நூற்பாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 2 Aug 2021 10:56 PM IST (Updated: 2 Aug 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் பஞ்சுகள் எரிந்து நாசமானது.

பல்லடம்
பல்லடம் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் பஞ்சுகள் எரிந்து நாசமானது.
நூற்பாலையில் தீ விபத்து 
பல்லடம் - தாராபுராம் ரோட்டில் கள்ளக் கிணறு கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில்  வட மாநில மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை  செய்து வருகின்றனர். மேலும் நூற்பாலையில் உள்ள ஒரு குடோனில் விற்பனைக்காக கழிவு பஞ்சு மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் நூற்பாலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடோனில் இருந்து புகை வெளியேறியது.  உடனடியாக அங்கு சென்ற பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சு மூட்டையில் தீ மளமளவென பரவியது.
தீயை அணைத்தனர்
 இது பற்றி பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு படையினர் மற்றும் நூற்பாலையின் லாரிகள் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரமாக போராடி தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கழிவு பஞ்சு மூட்டைகள், எந்திரங்கள் மற்றும் கட்டிடங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தன. மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. 
இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

Next Story