முருகன் கோவில்களில் பக்தர்களின்றி பூஜை


முருகன் கோவில்களில் பக்தர்களின்றி பூஜை
x
தினத்தந்தி 2 Aug 2021 11:15 PM IST (Updated: 2 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் இன்றி பூஜை நடைபெற்றது.

புதுக்கோட்டை, ஆக.3-
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் இன்றி பூஜை நடைபெற்றது.
தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு
கொரோனா பரவல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) வரை கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு ஆகம விதிகளின் படி பூஜை நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இந்த நிலையில் நேற்று ஆடி கிருத்திகையொட்டி முருகன் கோவில்களில் ஆகம விதிகளின் படி பூஜை நடைபெற்றது. இதில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற விராலிமலை முருகன் கோவிலில் சிறப்புபூஜை நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சிறப்பு பூஜை
 புதுக்கோட்டை  டவுனில் பாலதண்டாயுத பாணி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூைஜ நடைபெற்றது.

Next Story