மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை + "||" + korona test

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை
திருப்பூருக்கு கடந்த மாதம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூருக்கு கடந்த மாதம் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூருக்கு திரும்பும் தொழிலாளர்கள் 
தொழில்நகரமான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வேலை வாய்ப்பு அதிகமாக இருந்து வருவதால் திருப்பூருக்கு பலரும் வேலை தேடி வருகிறார்கள். 
தற்போது வடமாநில தொழிலாளர்கள் 3 லட்சம் பேரும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 5 லட்சம் பேரும் என மொத்தம் 8 லட்சம் தொழிலாளர்கள் மாநகரில் இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் பின்னர் கடந்த மாதம் விதிக்கப்பட்ட தளர்வின் காரணமாக பனியன் நிறுவனங்கள் இயங்க தொடங்கியுள்ளன. இதனால் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்ப வர தொடங்கியுள்ளனர்.
18 ஆயிரத்து 444 பேருக்கு பரிசோதனை 
இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூருக்கு ரெயில்களில் வருகிற வடமாநில தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மாநகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், பரிசோதனை முடிவுகள் வரும் வரை நிறுவன விடுதிகள் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. 
அந்த வகையில் கடந்த மாதம் 1ந்தேதியில் இருந்து 31ந் தேதி வரை திருப்பூருக்கு வந்த 18 ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 32 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்து, சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி செய்தி எதிரொலி்: ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை திருக்கோவிலூர் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திருக்கோவிலூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 300 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
2. “கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்” - மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை
தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு யோசனை தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
3. ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
திசையன்விளையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
4. அமெரிக்காவில் இலவச கொரோனா பரிசோதனை; வரும் 19ந்தேதி தொடக்கம்
அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் மக்கள் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வசதியாக வலைதளம் தொடங்கப்பட உள்ளது.
5. கொரோனா பரிசோதனை செய்ய பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 61 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.