தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
ராமநாதபுரம்
வேலைவாய்ப்பற்ற ஆதி திராவிடர் இளைஞர்களை சுய தொழில் தொடங்க ஊக்குவித்திடும் வகையில் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு அரசு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்திரகலா தலைமையில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கி கடனுதவி வழங்குவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெற்றது. கடனுதவி வேண்டி முன்னதாக விண்ணப்பித்திருந்த 141 பேருக்கு இந்த நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதில் 96 நபர்கள் நேர்காணலில் பங்கேற்றனர். இதில் தாட்கோ மேலாளர் செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேர்காணலில் பங்கேற்றவர்களின் சுய தொழில் திட்ட வரைவு, தனித்திறன், கல்வித்தகுதி போன்றவற்றை கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, தகுதியான நபர்களுக்கு கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரித்துரைக்கப்படும்.
Related Tags :
Next Story