கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:35 PM IST (Updated: 2 Aug 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்

பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி கடைவீதிகளில் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. யூனியன் தலைவர் மற்றும் அதிகாரிகள் கடைவீதிகள் முழுவதும் அதன் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்கும் வகையில் அதற்குரிய ஏற்பாடுகளை கடையின் உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி)செந்தாமரைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கணேஷ்பாபு, என்மனங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் கார்மேகம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி முகக்கவசம் அணிதல், கை கழுவும் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது மண்டபம் ஒன்றிய அலுவலர்கள் உடனிருந்தனர்.
1 More update

Next Story