திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:45 PM IST (Updated: 2 Aug 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் மத்திய அரசு பழைய நடைமுறைகளை பின்பற்றக் கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தினால் தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகமாவதாக சித்தரித்து தலையில் பாரங்கல்லை ஏற்றியதால் பழுதாங்க முடியாமல் ஒருவர் மயங்கி விழுவது போன்று செய்து காணப்பித்தனர். 

பின்னர் அவர்கள் பயிர் காப்பீடு திட்டத்தில் பழைய நடைமுறைகளை பின்பற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் புருஷோத்தமன், சிவா, பழனிசாமி, சரவணன், அய்யாயிரம், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story