பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்


பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:50 PM IST (Updated: 2 Aug 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 8 பேர் காயம் அடைந்தனர்.

பழனி:
விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 27). இவர், தனது உறவினர்கள் 15 பேருடன் கடந்த 31-ந்தேதி ஒரு வேனில் தேனியில் உள்ள கருப்பணசாமி கோவிலுக்கு வந்தார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் சுற்றுலா இடங்களை கண்டுகளித்து விட்டு நேற்று மாலையில் அவர்கள் பழனி வழியாக ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் வட்டமலை பகுதியில் வந்தபோது, திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி ராஜாராமன் உள்பட 8 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story