கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
கரூர்
கரூரில் நேற்று கொரோனா குறித்த ஒருவார கால விழிப்புணர்வின் 2-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். இதில் இருசக்கர வாகன பேரணி, பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் மாபெரும் கைகழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கரூர் ரெயில்நிலையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன ஊர்வலத்தில் கலெக்டரும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றார். திருவள்ளுவர் மைதானத்தில் முககவசம் அணிதல், சமுகஇடைவெளி கடைபிடித்தல் மற்றும் உறுதிமொழி எடுத்தல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
குளித்தலையில் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) தவச்செல்வன் தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story






