கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2021 6:49 PM GMT (Updated: 2 Aug 2021 6:49 PM GMT)

கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

கரூர்
கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், விஜயலட்சுமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பது என்பன உள்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கை முன்வைத்து பேசினர். இதில் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story