சிறுமியை திருமணம் செய்தவர் கைது

x
தினத்தந்தி 3 Aug 2021 12:28 AM IST (Updated: 3 Aug 2021 12:28 AM IST)
சிறுமியை திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக் (வயது 27). இவர் கரூர் பஞ்சமாதேவியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி நல அலுவலர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கார்த்திக்கின் தாயார் பானுமதி (50), சிறுமியின் பெற்றோர் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





