காதப்பாறை ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
காதப்பாறை ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம்
ஊராட்சி அலுவலகம்
கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி அலுவலகம் மிகவும் சிறிய அளவில் உள்ள கட்டித்தில் செயல்பட்டு வந்தது. இதனால் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதற்கும், பொதுமக்கள் வந்து செல்வதற்கும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அந்த பழை கட்டிடத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. பின்னர் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா பரவல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக அந்த பணிகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் நடந்து பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே புதிய ஊராட்சி அலுவலகத்தை விரைந்து கட்டி முடித்து பயன்பாட்டிற்கு விடப்படுமா? என்று காதப்பாறை ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story