குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்
நொய்யலில் இருந்து வேலாயுதம்பாளையம் பாலத்துறை வரை நெடுஞ்சாலையில் தார்சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் அந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குழி இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story